×

திருப்பூர் வடக்கு தொகுதி விஜயகுமார் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அதிமுக எம்எல்ஏவுக்கு சிகிச்சை: திருப்பத்தூர் திமுக எம்எல்ஏவுக்கும் தொற்று

சென்னை:  திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். திருப்பத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ நல்லதம்பிக்கும் தொற்று உறுதியானது. திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் (60), சென்னையில் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்று திருப்பூர் திரும்பினார். அப்போது அவர் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டார். கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இதயநோயும் உள்ளதால், திருமுருகன்பூண்டி, அணைப்புத்தூரில் உள்ள தனது மருமகனுக்கு சொந்தமான மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நல்லதம்பி எம்எல்ஏ: சென்னையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்ெதாடரில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்று வீடு திரும்பினார். அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகள் இருந்தது. இதனால் அவர் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அதேபோல் திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணனுக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்….

The post திருப்பூர் வடக்கு தொகுதி விஜயகுமார் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அதிமுக எம்எல்ஏவுக்கு சிகிச்சை: திருப்பத்தூர் திமுக எம்எல்ஏவுக்கும் தொற்று appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Vijayakumar ,Corona Intensive Care Unit ,Tirupur North Constituency ,Tirupattur ,DMK MLA ,Chennai ,Tirupur ,North Constituency ,Tirupattur… ,Tiruppur North Constituency ,Tirupathur DMK MLA ,Dinakaran ,
× RELATED லாரி டிரைவரிடம் பணம், செல்போன் வழிப்பறி