- இந்தியா
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ்
- ஜகார்த்தா
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ்'
- இந்தியா ஓப்பன் பேட்மிண்டன்
- சிராக் ஷெட்டி
- சாத்விக் ரெட்டி
- தின மலர்
ஜகர்தா: இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் ‘இந்தோனேசியா மாஸ்டர்ஸ்’ பேட்மின்டன் போட்டி இன்று தொடங்குகிறது. நேற்று முன்தினம் முடிவடைந்த இந்தியா ஓபன் பேட்மின்டன் போட்டி அரையிறுதியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மட்டுமே இந்திய வீரர்கள் முன்னேறினர். அதில் சிராக் ஷெட்டி/சாத்விக் ரெட்டி தோல்வியை சந்தித்தாலும் 4வது இடம் பிடித்தது. மற்ற நட்சத்திர வீரர்கள், வீராங்கனைகள் காலிறுதி மற்றும் அதற்கு முந்தைய சுற்றுடன் வெளியேறினர். இந்த ஆண்டு நடந்த மலேசியா ஓபன், இந்தியா ஓபன் என முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியர்கள் பட்டம் ஏதும் பெறவில்லை.
இந்நிலையில், இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் ‘இந்தோனேசியா மாஸ்டர்ஸ்’ பேட்மின்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.அதனால் 3வது போட்டியான இதில் முன்னாள் உலக சாம்பியனான சிந்து, பிரணாய் உள்ளிட்டவர்கள் சாதிக்க முயற்சி செய்வார்கள். குறிப்பாக, இந்திய ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய இணையான சிராக்/சாத்விக் இந்தப்போட்டியில் ஆண்டில் முதல் பட்டத்தை கைப்பற்றுவார்கள் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The post இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டனில் சாதிக்க துடிக்கும் இந்தியா: ஜகர்தாவில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.
