×

ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஓபலிக்ஸ்: த மிடில் கிங்டம் – திரை விமர்சனம்

புகழ்பெற்ற காமிக்ஸ் மற்றும் புத்தகங்கள் என 80ஸ், 90ஸ் குழந்தைகளை ஈர்த்த கதாபாத்திரங்கள் இந்த ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஓபலிக்ஸ், மனிதர்களில் இருந்து சற்றே வித்யாசமான செய்கைகளும், மந்திர சக்தி கொடுக்கும் பானம் உட்பட என இவர்கள் விசித்திரமான ரோமானியர்களாக உருவாக்கப்பட்ட பார்த்திரங்கள். இந்தக் கதைகளின் கதாபாத்திரங்கள் இப்போதும் கார்டூன் உலகில் மிகப் பிரபலம். இக்கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

அவை, ஆஸ்டரிக்ஸ் & ஓபலிக்ஸ் :டேக் ஆன் சீஸர், (1999), ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஓபலிக்ஸ்: மிஷன் கிளியோபாட்ரா (2002), ஆஸ்டரிக்ஸ் அட் த ஒலிம்பிக் கேம்ஸ்(2008), ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஓபலிக்ஸ் : காட் சேவ் பிரிட்டானியா(2012) என இதுவரை 4 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், விறுவிறுப்பான சாகசங்கள் நிரம்பிய ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஓபலிக்ஸ்:த மிடில் கிங்டம் எனும் ஐந்தாவது படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக இயற்றப்பட்டுள்ளது.

பிலிப் மெக்கெலென். ஜூலியன் ஹெர்வ் ஆகியோர் கதை எழுத கல்லௌம் கெனெட் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். படத்தின் இயக்குநரே ஆஸ்டரிக்ஸ் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஓபலிக்ஸாக கில்ஸ் லெல்லௌச் நடித்துள்ளனர். சீனப் பேரரசரின் ஒரே மகளான இளவரசி ஃப்யு இய்(ஜூலி சென்) தனது மனைவியாக மாற்றிக்கொள்ள பக்கத்து நாட்டு சிறு நில சீன மன்னர் டெங் ட்சிங் க்யுன் விரும்புகிறான். அவர்களிடமிருந்து தப்பிக்கிறார் இளவரசி, ஆனால் பேரரசி சிறையில் அடைக்கப்படுகிறார். இளவரசி ஃப்யு ரோமானியர்களான ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஓபலிக்ஸ் மற்றும் கௌல் மக்களிடம் தன் அன்னையைக் காப்பாற்ற உதவிக் கேட்கிறாள்.

அதன் பின் என்னாகிறது என்பது மீதிக் கதை. ஆஸ்டரிக்ஸாக கல்லௌம் மற்றும் ஓபலிக்ஸாக கில்ஸ் லெல்லௌச் இருவரும் தான் படத்தின் தூண்களாக காமெடி, ஆக்ஷன், வசனங்கள் என பட்டையைக் கிளப்புகிறார்கள். முந்தைய பாகங்கள் போலவே இதிலும் சாகசங்களுக்குப் பஞ்சமில்லை. மேலும் கதையும் சுற்றி வளைக்காமல் அற்புதமாக ராஜகுமாரியைக் காப்பாற்றும் கதையாக மிரட்டியிருக்கிறார் இயக்குநர். ஆண்ட்ரி செமெட்டாஃப் ஒளிப்பதிவும், மேத்யூ செடிட் இசையும் படத்துக்கு பக்கபலம். படம் விஷுவல் விருந்தாக அமைந்தற்குக் காரணம் இவ்விருவர்தான்.

குறிப்பாக ரோமானிய கடைத்தெருக்கள், சீசரின் மாளிகை, மற்றும் கடைசி போர் காட்சிகள் என படம் முழுக்க கண்கள் இமைக்காமல் பார்க்க பல விஷயங்கள் உள்ளன. மேலும் குடும்பங்கள், குழந்தைகள் என பார்த்து மகிழ ஏதுவாக இந்திய வெர்ஷனில் ரொமான்ஸ் காட்சிகள் கூட தவிர்க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்கு ஒரு படம் என எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு இந்தப் படம் நல்ல காமெடி விருந்தாக இருக்கும் இந்த ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஓபலிக்ஸ்: த மிடில் கிங்டம்.

The post ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஓபலிக்ஸ்: த மிடில் கிங்டம் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kollywood News ,Kollywood Images ,
× RELATED நான் வலுவாக இருக்க காரணம் ஆன்மீகம்: சமந்தா