- அண்ணாசகரம் ஏரி
- தர்மபுரி
- தர்மபுரி அண்ணாசகரம் ஏரி
- தர்மபுரி மாவட்டம்
- பொதுப்பணித் துறை
- இராமகால்
- செட்டிகராய்
- நார்தும்பட்டி
- லலிகம்
- பாப்பார்பட்டி
- ஃபைசுவாலி
- தின மலர்
தர்மபுரி, ஜன.19: பருவமழை பெய்தும் தர்மபுரி அன்னசாகரம் ஏரிக்கு நீர்வரத்தின்றி காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு ஆண்டின் சராசரி மழையளவு 760 மி.மீ ஆகும். மாவட்டத்தில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ராமாக்காள், செட்டிக்கரை, நார்த்தம்பட்டி, லளிகம், பாப்பாரப்பட்டி, பைசுஅள்ளி, சோகத்தூர் உள்பட 73 ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 634 ஏரி, குளங்களும் உள்ளன. நடப்பாண்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்யவில்லை.
அன்னசாகரம் ஏரியை நம்பி அன்னசாகரம், கொல்லஅள்ளி, எரங்காட்டு கொட்டாய் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதேபோல் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட நகர விரிவாக்க பகுதிகளில் ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் உயரும். ஆனால், நடப்பாண்டில் ஓரளவிற்கு மழை பெய்தும் அன்னசாகரம் ஏரி தண்ணீர் வரத்து இன்றி காய்ந்து கிடப்பதால், விவசயிகள் கவலையடைந்துள்ளனர்.
The post நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கும் அன்னசாகரம் ஏரி appeared first on Dinakaran.
