×

சாத்தான்குளம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சாத்தான்குளம், ஜன. 19: சாத்தான்குளம் மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் 2000-2001ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் கல்வி சங்க தலைவர் அற்புதராஜ் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் குமரகுருபரன், கதிரேசன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மகேஷ்வரி வாழ்த்தி பேசினார். முன்னாள் மாணவர்கள் சநதிப்பை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பிச்சைக்கனி, ஜெயசெல்வி, முன்னாள் எழுத்தர் சேகர் பேசினார். பள்ளி ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி செல்வசேகர், மெர்சி,ஜோதிபாசு, கண்ணன், லிங்கசெல்வி, பள்ளி எழுத்தர்சதீஷ் உள்பட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பின் மூலம் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து உரையாடினர்.

The post சாத்தான்குளம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Sathankulam School ,Sathankulam ,Mariyamman Hindu Higher Secondary School ,Academic Association ,President ,Arputraraj ,Kumaragurubaran ,Kathiresan ,School ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை