- கண்ணமங்கலம்
- ஆனந்தஜோதி
- பிள்ளையார் கோயில் தெரு, சின்னபுத்தூர் கிராமம்
- திருவண்ணாமலை மாவட்டம்
- ஜோதிலக்ஷ்மி
- சுரேஷ்
கண்ணமங்கலம், ஜன. 17: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த சின்னப்புத்தூர் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தஜோதி(53). இவரது மனைவி ஜோதிலட்சுமி(44). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் உறவினர் சுரேஷ்(34). கூலி வேலை செய்யும் இவர்கள், ஆடுகளையும் மேய்த்து வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ் சமீபத்தில் சில ஆடுகளை விற்பனை செய்தாராம். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. நேற்றுமுன்தினம் மீண்டும் சுரேசுக்கும், ஜோதிலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ், தன்னிடம் இருந்த கத்தியால் ஜோதிலட்சுமியை வெட்டிக்கொன்றார். தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேஷை தேடி வந்தனர். இந்நிலையில் தகராறில் காயம் அடைந்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷை நேற்று போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post பெண்ணை வெட்டி கொன்றவர் கைது ஆடு விற்பனை தகராறு appeared first on Dinakaran.
