×

பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறப்பு

பெங்களூரு: பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் நேற்று திறக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ஆகியோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் கலந்துகொண்டார்.

பெங்களூருவில் அமெரிக்க தூதரகத்திற்கான பிரத்யேக கட்டிடம் அமைக்கும் பணிகள் நடந்துவரும் நிலையில், இப்போதைக்கு தற்காலிகமாக பெங்களூரு விட்டல் மல்லையா சாலையில் உள்ள ஜேடபிள்யூ மாரியாட் ஓட்டலில் அமெரிக்க துணை தூதரகம் செயல்படும். விசா சேவையும் இப்போதைக்கு வழங்கப்படவில்லை.

The post பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : US Consulate General ,Bengaluru ,External Affairs Minister ,S Jaishankar ,US ,Ambassador ,India ,Eric Garcetti ,Deputy Chief Minister ,D.K. Shivakumar ,US Embassy ,Bengaluru… ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...