- அய்யா பவானி
- பூஞ்சப்பரம்
- சந்தை யடியூர் திருவிழா
- உடன்குடி
- மார்கழி மாதம் பால்குடம்
- அய்யா
- நிழல் தங்கலில்
- பதியான அய்யா
- அன்ன வாகன பவனி
- அய்யா நாகா
- வாகனா
- பவானி
உடன்குடி,ஜன.17:உடன்குடி சந்தையடியூரில் தாகம் தணிந்த பதியான அய்யா நிழல் தாங்கலில் மார்கழி மாத பால்முறை திருவிழா, கடந்த 10ம் தேதி மாலையில் அய்யா அன்ன வாகன பவனியுடன் தொடங்கியது.
மறுநாள் காலை 10 மணிக்கு அய்யா நாக வாகனத்தில் பவனி, மாலை 3 மணிக்கு தர்மம் எடுத்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு தீப வழிபாடு நடந்தது. 12ம் தேதி அதிகாலை 2 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி, தொடர்ந்து உம்பான் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி, 13ம் தேதி மாலை 4 மணிக்கு சந்தனகுடம் பவனி, இரவு 7 மணிக்கு அய்யா அனுமான் வாகனத்தில் பவனி, 14ம் தேதி காலை 6 மணிக்கு பதியில் பால் வைத்தல், காலை 10 மணிக்கு அய்யா பூஞ்சப்பரத்தில் பவனி நடந்தது. சப்பரத்திற்கு அனைத்து வீடுகளில் சுருள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணி, மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சி படிப்பு நடந்தது. ஏற்பாடுகளை சந்தையடியூர் அன்புகொடி மக்கள் செய்திருந்தனர்.
The post சந்தையடியூர் திருவிழாவில் பூஞ்சப்பரத்தில் அய்யா பவனி appeared first on Dinakaran.
