×

குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் சிறப்பு விருந்தினர்

புதுடெல்லி: இந்தோனேசியாவின் 8வது அதிபராக கடந்த அக்டோபர் மாதம் பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்றார். இவர் நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தோனேசிய அதிபர் சுபியாந்தோ இந்தியாவில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இந்தியாவின் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

The post குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் சிறப்பு விருந்தினர் appeared first on Dinakaran.

Tags : President ,Republic Day ,New Delhi ,Prabowo Subianto ,8th President of ,Indonesia ,India ,Union… ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...