×

மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் : சர்வதேச புத்தகத் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை : சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பன்னாட்டு புத்தகத் திருவிழாவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 3வது ஆண்டு பன்னாட்டு புத்தகத் திருவிழா சனிக்கிழமை வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அமெரிக்கா, மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட 65 நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் 2023ம் ஆண்டில் 24 நாடுகள் பங்கேற்றன. 2024ல் 40 நாடுகள் பங்கேற்றன.

இந்த நிலையில் சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில், “66 தமிழ் புத்தகங்கள் 32 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளாக பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 18ம் தேதி சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளார். மிழை உலகளாவிய அளவிற்கு மொழிபெயர்க்க 35 இலக்கிய வல்லுநர்களை நாம் பயிற்சி செய்துள்ளோம்”இவ்வாறு தெரிவித்தார்.

The post மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் : சர்வதேச புத்தகத் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Minister ,Ambil Mahesh ,International Book Festival ,Chennai ,Nandambakkam Trade Centre ,Chennai Mo ,Anbarasan ,Mahez ,3rd Annual International Book Festival ,United States ,Malaysia ,France ,Minister Ambil Mahesh ,Dinakaran ,
× RELATED அவசரமாக குழந்தைகளுடன் பெட்டியில்...