×

மூதாட்டியிடம் 2 சவரன் நகை திருட்டு ஆரணியில்

ஆரணி, ஜன. 14: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மதுரை பெரும்பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி பார்வதி (68), இவர், பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்த பஸ்சில் ஆரணிக்கு வந்துள்ளார். பின்னர், பார்வதி பொருட்களை வாங்கிக் கொண்டு, ஆரணி டவுன் புதிய பஸ்நிலையத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து, பஸ்நிலையத்தில் ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் அரசு டவுன் பஸ்சில் பார்வதி ஏறிச்சென்றுள்ளார். அப்போது, பஸ் கூட்டம் அதிகமாக இருந்ததால், பார்வதி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகை இல்லாதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, நகை திருட்டுபோனதால், மூதாட்டி பஸ்ஸிலேயே கத்தி கதறி கூச்சலிட்டு கதறி அழுதார். உடனே, டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து, டவுன் போலீசில் பார்வதி(68) நேற்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் 2 சவரன் நகை திருட்டு ஆரணியில் appeared first on Dinakaran.

Tags : Arani ,Varadhan ,Madurai Perumbattur ,Sethupattu ,Tiruvannamalai district ,Parvathy ,Pongal festival ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி