- தீவு சுற்றுலா தொழில்நுட்ப கண்காட்சி
- மேலாண்மை
- ஷில்பா பிரபாகர் சதீஷ்
- சென்னை
- 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி
- மத்திய அரசு சென்னை…
- நிர்வாக இயக்குனர்
சென்னை: சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் பல்வேறு ”திட்டங்களின் செயல் மாதிரிகளுடன் அரசு துறைகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 41 மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அரங்குகள், ஒன்றிய அரசின் சென்னை துறைமுகம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அரங்குகள் உள்பட 43 அரங்குகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பொருட்காட்சியில் 110 சிறிய கடைகள் மற்றும் 30 தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி அப்பளம், பஜ்ஜி, ஐஸ்கிரீம், கரும்புசாறு, பானிபூரி, பால்கோவா, காலிபிளவர் பக்கோடா, சோளாபூரி போன்ற சிற்றுண்டி உணவகங்களும் இடம்பெற்றுள்ளன. இப்பொருட்காட்சி நடத்துவதன் மூலம் நேரடியாக சுமார் 6,000 பேரும், மறைமுகமாக சுமார் 30,000 பேரும் வேலைவாய்ப்பை பெறுவார்கள். மேலும், 80,000 சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டு அதில் 30க்கும் மேற்பட்ட இதுவரை பாரத்திடாத, விளையாடி மகிழ்ந்திடாத விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் மக்கள் மனதை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் ரயில், பனிக்கட்டி உலகம், அவதார் உலகம், மென் காட்சியகம், மிரளவைக்கும் பேய் வீடு, பறவைகள்காட்சி, 3டி தியேட்டர், அறிவியல் உலகம் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. பொருட்கட்சியின் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு (4வயது முதல் 10 வயது வரை) ரூ.25, மாணவ, மாணவியர்களுக்கு (சலுகை கட்டணம்) ரூ.25, பொருட்காட்சி நேரம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
The post தீவுத்திடல் சுற்றுலா தொழில்நுட்ப பொருட்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகள் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரங்குகள்: மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல் appeared first on Dinakaran.
