- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- காங்கிரஸ்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி
- ஜனாதிபதி
- பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்குமார்
- கவர்னர்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி., பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கை: தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல், முன்பே வெளிநடப்பு செய்த ஆளுநருக்கு, தேசப்பற்று பற்றி முதலமைச்சருக்கு வகுப்பு எடுக்கத் தகுதி இல்லை. சுதந்திரப்போராட்டத்தின் போது ஓடி ஒளிந்து கொண்டவர்களில் வழிவந்த ஆளுநர் ரவிக்கு, தேசப்பற்றைப் பற்றி பேச தகுதியில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து அவையிலிருந்து வௌியேறிய ஆளுநர் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல்,அவரை ஆளுநர் பதவியிலிருந்து மத்திய அரசு உடனே வெளியேற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி பேச தகுதி இல்லை: ஆளுநருக்கு காங். கண்டனம் appeared first on Dinakaran.
