×

கலெக்டர் அறிவிப்புதஞ்சை மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா

 

தஞ்சாவூர், ஜன. 12: தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் கலந்து கொண்டு சுமார் 120 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கரும்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொரூப்ராணி, துணை தலைமை ஆசிரியர் ஜெயந்தி ஷாலினி, இடைநிலை ஆசிரியர்கள் ரெஜினா ரோசாரியோ, மணிமேகலை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேவி 45 ஆவது வார்டு வட்டச் செயலாளர் சுரேஷ் ரோச், பிரதிநிதிகள் செல்வராஜ் செந்தில்குமார் ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி மாணவ மாணவியருக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

The post கலெக்டர் அறிவிப்புதஞ்சை மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal ,Thanjavur Corporation School ,Thanjavur ,Corporation Primary School ,45th Ward Cooperative Colony ,Thanjavur Corporation ,Mayor San. Ramanathan ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை