×

சபரிமலையில் 14ம் தேதி மகர விளக்கு பூஜை: இன்று எருமேலி பேட்டை துள்ளல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையே மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்திபெற்ற எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்ப விக்கிரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த திருவாபரணம் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டுவரப்படும். இவ்வருட திருவாபரண ஊர்வலம் நாளை (12ம் தேதி) பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது.இந்த ஊர்வலம் 14ம் தேதி மாலை 6.15 மணியளவில் சன்னிதானத்தை அடையும். பின்னர் இந்த திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். கோயிலில் சுத்திக்கிரியை பூஜைகள் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகிறது.  14ம் தேதி பிற்பகல் 2.29 மணியளவில் மகர சங்கிரம பூஜை நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து பெருவழிப்பாதையில் பக்தர்கள் செல்வதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது….

The post சபரிமலையில் 14ம் தேதி மகர விளக்கு பூஜை: இன்று எருமேலி பேட்டை துள்ளல் appeared first on Dinakaran.

Tags : Makara Lampu Pooja ,Sabarimala ,Hat Jumping ,Thiruvananthapuram ,Makaravilakku ,Erumeli Hat Jumping ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு