×

ஒவ்வொரு வயலுக்கும் நேரடியாக சென்று 4 லட்சத்து 92 ஆயிரத்து 891 பேருக்கு பொங்கல் செங்கரும்பு கொள்முதல்

புதுக்கோட்டை, ஜன.9: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுடம் பொங்கல்தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் செய்ததால் பொங்கல் கருப்பு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு இலுப்பூர் வட்டாரத்தில் 30 ஏக்கர், திருமயம் வட்டாரத்தில் 20 ஏக்கர் மற்றும் அறந்தாங்கி வட்டாரத்தில் 40 ஏக்கர் இன்னும் பல வட்டாரங்கள் என புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 150 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

நியாய விலைக்கடைகள் மூலம் நுகர்வோர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி பொங்கல் தொகுப்புக்காக இவற்றை கொள்முதல் செய்யும் பணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சிட்டா, அடங்கல் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு வேளாண்மை உதவி அலுவலர்கள் வயல்களில் களஆய்வு செய்து. பின்பு விவசாய கூலி தொழிலாளர்கள் மூலம் கரும்புகள் வெட்டப்பட்டு உரிய ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து 10 எண்ணிக்கை கொண்ட கரும்புகளை ஒரு கட்டாக கட்டப்பட்டு லாரிகளில் ஏற்றி அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இறக்கி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இலஙலகை அகதிகள் முகாம் என ஆயிரத்து ஐந்து ரேஷன் கடைகள் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4,91,944 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 947 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் என மொத்தம் 4,92,891 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்புகள் பொங்கல் தொகுப்பில் வழங்க உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வயல்களில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும், வெட்டப்பட்ட கரும்புகளை ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த விதிமுறையின்படி உள்ளதா என்று சரிபார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கரும்புகள் ஒவ்வொரு வயல்களிலும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. என்றனர்.இது குறித்து புதுக்கோட்டை விவசாயிகள் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. பொங்கல்தொகுப்பில் கரும்பு இடம்பெற்றதால் விற்பனைக்காக வியாபாரிகளையே நம்பி இருக்க வேண்டிய நிலை மாறிவிட்டது. மேலும் சிலநாட்களிலே இவற்றை விற்றுவிட்டோம். மீதம் உள்ள கரும்புகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக வெட்டாமல் வைத்துள்ளோம். அரசே எங்களிடம் கொள்முதல் செய்வதால் எங்களுக்கு விற்பனையில் பெரிய அலைச்சல் இல்லை. விற்பனை ஆகோமோ இல்லையோ என்ற கவலையும் இல்லை. இதனால் நிம்மதியாக கருப்புகளை விற்பனை செய்துவருகிறோம் இடைத்தரகர்கள் இல்லாமல் அதிகாரிகள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கார்டுதாரர்களுக்கும் தரமான கரும்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . புதுக்கோட்டை மாவட்டத்தில் கரும்பு கொள்முதல் தொடங்கி உள்ளதால் கூலியாட்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கரும்பு கொள்முதல் தொடங்கியதைத் தொடர்ந்து விவசாயிகளிடையே பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது என்றனர்.

The post ஒவ்வொரு வயலுக்கும் நேரடியாக சென்று 4 லட்சத்து 92 ஆயிரத்து 891 பேருக்கு பொங்கல் செங்கரும்பு கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Pongal Sengaru ,Pudukkottai ,Pongal ,Pudukkottai district ,Ilupur ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை