திருவொற்றியூர்: மணலி மண்டலம், 17வது வார்டு கொசப்பூர் அருகே ஆண்டார்குப்பம் – செங்குன்றம் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது செடி, கொடிகள் படர்ந்து பழுதடைந்து பல மாதங்களாக சாய்ந்து கிடந்தது. மேலும் மின் கம்பங்களில் மின் வயர்கள் பல இடங்களில் தாழ்வாகவும், மரங்களில் படர்ந்தும் இருந்ததால் மழைக்காலத்தில் இந்த பகுதியில் அடிக்கடி மின் கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த செய்தி நேற்று தினகரனில் படத்துடன் வெளியானது.
இதையடுத்து மணலி புதுநகர் மின்வாரிய அலுவலர்கள் இந்த பகுதியில் சாய்ந்து கிடந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்து, மின் கம்பத்தின் மீது படர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி தாழ்வாக இருந்த மின் வயர்களையும் சீரமைத்தனர். மேலும், கொசப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விளாங்காடுபாக்கம் மின்விநியோக பயன்பாட்டு கட்டுப்பாட்டை மணலி மின் நிலையத்திற்கு மாற்றுவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
The post மணலி ஆண்டார் குப்பம்- செங்குன்றம் சாலையில் டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு appeared first on Dinakaran.