×

தேமுதிகவினர் 85 பேர் மீது வழக்கு

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி மாவட்ட தேமுதிக சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தடையை மீறி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாநில அவைத்தலைவர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ், மாவட்ட அவைத்தலைவர் தங்கவேல் உள்ளிட்ட 85 பேர் பங்கேற்றனர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த மாவட்ட செயலாளர் உள்பட 85பேர் மீது, தர்மபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post தேமுதிகவினர் 85 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : DMDK ,Dharmapuri ,district ,BSNL ,District Secretary ,Kumar ,State Assembly ,Dinakaran ,
× RELATED மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்; தடையை மீறி பேரணி!