×

தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் 23,673 வாக்காளர்கள்-ஆட்சியர் தகவல்

விழுப்புரம் : தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் 23,673 பேர் வாக்களிக்க உள்ளதாக ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் வார்டு வரையறை, வாக்குச்சாவடிகள் இறுதிப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று, அனைத்துஅங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மோகன் வெளியிட்டார்.ெதாடர்ந்து அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்காக கடந்த 1.11.2021 நாளிட்ட ஒருங்கிணைந்த சட்டமன்ற வாக்காளர் பட்டியல்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாக்காளர் பட்டியல்களின்படி, கோட்டக்குப்பம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 11,581 பேர், பெண் வாக்காளர்கள் 12,090 பேர், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 23,673 வாக்காளர்கள் உள்ளனர். கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் பட்டியல்கள் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) ராமகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் ஜெயமூர்த்தி, மணி, சரவணன், அதிமுக நகர செயலாளர் ராமதாஸ், துணை செயலாளர் செந்தில், காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ரமேஷ், செல்வராஜ், ராஜ்குமார், சிபிஎம் சுப்பிரமணியன், பகுஜன்சமாஜ் கலியமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.கொரோனா அச்சத்தால் கட்சியினருக்கு ஸ்நாக்ஸ் கட்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், உருமாறிய ஒமிக்ரான் வைரஸ்தொற்று அதிகரித்துவருகிறது. அடுத்த சிலநாட்களில் மின்னல் வேகத்தில் பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சியினர் முகக்கவசம் அணிய வேண்டும். இதனை மக்களிடத்தில் எடுத்துக்கூறவேண்டும். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும். கூட்டங்களுக்கு எங்கு சென்றாலும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். இந்தகூட்டத்திலும், கொரோனா அச்சத்தால் ஸ்நாக்ஸ் கொடுப்பது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்….

The post தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் 23,673 வாக்காளர்கள்-ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kotakkupam Municipality ,Viluppuram ,Ruler Mohan ,Graduated Kottakkupam Municipality ,Vilappuram District ,
× RELATED மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...