×

குன்னூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெட்போர்ட், ஒய்எம்சிஏ சாலையை ஒருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

குன்னூர்: குன்னூரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஒருவழி பாதை திட்டம் அமல்படுத்தினால் 80% போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தலாம் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்துவரும் நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்து வருகிறது. இந்நிலையில், குன்னூரில் போதிய அளவிலான பார்க்கிங் வசதி இல்லாததால், பல்வேறு வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு விதிகளை மீறி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

குன்னூர் மவுண்ட்ரோடு சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். இருப்பினும் குன்னூர் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு காவல் துறையினர் தொடர்ந்து போராடி வந்தாலும், காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களால் அதிக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெட்போர்ட் பகுதியில் இருந்து ஒய்எம்சிஏ, அரசு மருத்துவமனை வழியாக குன்னூர் நகர பகுதிக்கு வாகனங்கள் வருவதற்கும், நகர பகுதியில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் லாரி நிலையம், உபாசி வழியாக சென்று பெட்போர்டு சந்திப்புக்கு செல்வதற்கு வழிவகை செய்தால், சுமார் 80 சதவீத போக்குவரத்து நெரிசல் தவிர்க்கலாம் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post குன்னூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெட்போர்ட், ஒய்எம்சிஏ சாலையை ஒருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coonoor, Bedford, YMCA Road ,Coonoor ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED குன்னூரில் போக்குவரத்து நெரிசலை...