×

உடையார்பாளையம் பெரிய ஏரியில் மூதாட்டி சடலம்

 

ஜெயங்கொண்டம் ஜன.6: உடையார்பாளையம் பெரிய ஏரியில் மூதாட்டி சடலமாக மிதங்கியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிரையன்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி தனம்(80). இவர், அடிக்கடி உடையார்பாளையத்தில் உள்ள தம்பி வீட்டிற்கு சென்று விடுவாராம். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சென்ற தனத்தை காணவில்லை என்றும், வழக்கம் போல உடையார் பாளையத்தில் உள்ள தம்பி வீட்டுக்கு சென்று இருக்கலாம் என அவரது மகன் கலியமூர்த்தி நினைத்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் உடையார்பாளையம் பெரிய ஏரியில் தண்ணீரில் தனம் சடலமாக மிதந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தனத்தின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post உடையார்பாளையம் பெரிய ஏரியில் மூதாட்டி சடலம் appeared first on Dinakaran.

Tags : Udayarpalayam ,Jayankondam ,Subramanian ,Thanam ,Vanathiraiyanpattinam ,Ariyalur district ,Udayarpalayam.… ,
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: காவல்துறை ஏற்பாடு