- தந்தை ஹான்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி 43வது பள்ளி விளையாட்டு விழா
- பெரம்பலூர்
- Hans
- ரோவர் மேல்நிலைப் பள்ளி
- 43வது பள்ளி விளையாட்டு விழா
- ஹான்ஸ் ரோவர் கல்வி குழுமம்
- நிர்வாக இயக்குனர்
- டாக்டர்
- கே.வரதராஜன்
- அறங்காவலர்
- ஏஎம்எம்ஏ
- துணை கண்காணிப்பாளர்
- தின மலர்
பெரம்பலூர், ஜன. 9: தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியின் 43-வது பள்ளி விளையாட்டு விழா நேற்று தந்தை ரோவர் கல்வி குழும மேலாண் தலைவர் டாக்டர். கே.வரதராஜன் தலைமையில், அறங்காவலர் அம்மா முன்னிலையில் நடைபெற்றது. பெரம்பலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆ.ஆரோக்கியராஜ் தேசியக் கொடி ஏற்றி வைத்தும், மேலாண் தலைவர் ஒலிம்பிக் கொடி ஏற்றி வைத்தும், அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, போட்டிகளை தொடங்கி வைத்து, டிஎஸ்பி ஆரோக்கியராஜ் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். தலைமை ஆசிரியர் துரை.இரவிசித்தார்த்தன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் த. விஜயகுமார் நன்றி கூறினார். இந்நிகழ்வினை, தலைமை அலுவலக மேலாளர், இயக்குனர், எக்ஸலன்ஸ் முதல்வர், ஸ்டேட் போர்டு முதல்வர், உதவித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
The post தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி 43-வது பள்ளி விளையாட்டு விழா appeared first on Dinakaran.