×

சென்னை மெட்ரோ ரயிலில் 2024ம் ஆண்டில் 10.52 கோடி பேர் பயணம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதிலிருந்து பொது மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது. 2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதேபோல், 2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020-ம் ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும், இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் 10,52,43,721 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

The post சென்னை மெட்ரோ ரயிலில் 2024ம் ஆண்டில் 10.52 கோடி பேர் பயணம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Rail ,Metro Rail Corporation ,Chennai ,Chennai Metro Rail Corporation ,Metro Rail ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண்...