×

மாணவிக்கு பாலியல் தொல்லை அமைச்சு பணியாளர் அதிகாரி உடந்தையான தாய் மீது வழக்கு

சென்னை: எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் 23 வயது இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: புகார் அளித்த மாணவியின் தாய், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் அமைச்சுப்பணியாளர் அதிகாரியாக பணியாற்றி வரும் பாக்யராஜ் என்பவருக்கும், மாணவியின் தாய்க்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

பாக்யராஜ் வீட்டிற்கு மாணவியின் தாய் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி வந்து செல்லும் போது, மாணவியிடம் பாக்யராஜ் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து அவரது தாயிடம் மாணவி கூறியபோது, பாக்யராஜிடம் அணுசரித்து செல், என்று கூறியுள்ளார். இதனால் தனது தாய் மற்றும் பாக்யராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த புகாரின் படி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பாக்யராஜ் அவரது கள்ளக்காதலியின் உதவியுடன் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.  அதைதொடர்ந்து அமைச்சுப்பணியாளர் அதிகாரி பாக்யராஜ் மற்றும் புகார் அளித்த மாணவியின் தாய் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை அமைச்சு பணியாளர் அதிகாரி உடந்தையான தாய் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Egmore All Women Police Station ,Tamil Nadu Police… ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஊகங்களின்...