×

ஊடுருவல்காரர்களை அனுமதிக்கும் பிஎஸ்எப் மேற்கு வங்க முதல்வர் மம்தா பகீர் குற்றச்சாட்டு

கொல்கத்தா: வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்கார்களை பிஎஸ்எப் படையினர் அனுமதிக்கின்றனர் என்றும் இதன் மூலம் மாநிலத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை செயலகத்தில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,‘‘ எல்லைப் பகுதிகள் வழியாக வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்களை இந்தியாவிற்குள் நுழைய எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) அனுமதிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இது மாநிலத்தை சீர்குலைக்க நடக்கும் முயற்சியாகும். இஸ்லாம்பூர், சீதாய், சோப்ரா மற்றும் பல எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு அனுமதிக்கின்றனர். இந்த ஆழ்ந்த சதி திட்டத்தின் பின்னணியில் ஒன்றிய அரசின் பங்கும் உள்ளது.ரவுடிகள் இந்தியாவுக்குள் நுழைகின்றனர். எல்லையின் இரண்டு பகுதிகளிலும் அமைதி நிலவ நான் விரும்புகிறேன். எல்லை பகுதிகளில் பெண்களை பிஎஸ்எப் படையினர் துன்புறுத்துகின்றனர். அதை பற்றி மாநில அரசு அதிகாரிகள் ஏன் கேட்க மறுக்கின்றனர் என தெரியவில்லை. இந்தியாவின் எல்லை பகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாக்கவில்லை. இது பிஎஸ்எப் வீரர்களின் பணி’’ என்றார்.

* பிஎஸ்எப் மறுப்பு
இதற்கிடையே மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை பிஎஸ்எப் மறுத்துள்ளது. பிஎஸ்எப் அதிகாரி கூறுகையில், இந்திய வங்கதேச எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் மிகுந்த நேர்மையுடனும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் எல்லையை கண்காணித்து வருகின்றனர். எல்லையின் பாதுகாப்பு விஷயத்தில் பாதுகாப்பு வீரர்கள் தங்களுடைய பொறுப்புகளை சிறப்பாக செய்து வருகின்றனர் என்றார்.

The post ஊடுருவல்காரர்களை அனுமதிக்கும் பிஎஸ்எப் மேற்கு வங்க முதல்வர் மம்தா பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BSP ,West Bengal ,Mamta Bakir ,Kolkata ,Mamata Banerjee ,BSF ,Bangladesh ,Chief Minister ,Mamta Banerjee ,Chief Secretariat ,Dinakaran ,
× RELATED மே.வங்கத்தில் தாய், தந்தை, சகோதரியை...