×

ராமநாதபுரம் அடுத்த வழுதூரில் லாரியும் ஆம்புலன்ஸ் வாகனமும் மோதியதில் மூவர் உயிரிழப்பு!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அடுத்த வழுதூரில் லாரியும் நோயாளிகளை ஏற்றி கொண்டு ராமநாதபுரம் நோக்கி வந்து ஆம்புலன்ஸ் வாகனமும் மோதியதில் ஆம்புலன்ஸில் வந்த மூவர் உயிரிழந்துள்ளார். மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாலாந்தரவை அருகே பெட்ரோல் பங்கில் இருந்து திரும்பிய விறகு ஏற்றி வந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன் உயிரிழந்தனர். மேலும் மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருகே அமர்ந்திருந்தவர் ஆம்புலன்ஸ்க்குள் சிக்கிக் கொண்டதால் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அவரை மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). இவருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரது மகள் அனீஸ் பாத்திமா (40) மற்றும் அவரது மருமகன் சகுபர் சாதிக் (47), ஹர்ஷத் (45), கதீஜா ராணி (40), ஆயிஷா பேகம் (35), ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வாலாந்தரவை அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது அப் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்; விறகு ஏற்றி வந்த லாரி ஒன்று டீசல் நிரப்பி விட்டு ராமநாதபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிய போது லாரியின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வந்த நோயாளி வரிசை கனி, சகுபர் சாதிக், அனீஸ் பாத்திமா ஆகிய மூவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ஹர்ஷித் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார். கதீஜா ராணி, ஆயிஷா பேகம் ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் மருத்துவமனை இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தனியார் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் அதிவேகமாக லாரியின் பின் பகுதியில் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருகே அமர்ந்திருந்த சகுபர் சாதிக் வாகனத்தில் சிக்கி கொண்டார்.

அவரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி வாகனத்தில் இருந்து மீட்டனர். மேலும் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த திடீர் விபத்து ஏற்பட்டதால் ஆம்புலன்ஸுக்கு பின்னால் வந்த ஆம்னி சொகுசு பஸ் மற்றும் சொகுசு கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சொகுசு காரில் வந்த இருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த மூவர் உடலை கேணிக்கரை போலீசார் உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறையில் உடலை ஒப்படைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ராமநாதபுரம் அடுத்த வழுதூரில் லாரியும் ஆம்புலன்ஸ் வாகனமும் மோதியதில் மூவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Valandarawa ,Madurai Rameswaram National Highway ,Madurai ,Dinakaran ,
× RELATED போதுமான மழை பொழிவால் அமோக  விளைச்சல் அடைந்த சிறுதானியங்கள்