×

‘டெல்டாகிரான்’ சைப்ரசில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: உலகளவில் ஏற்கனவே தாக்கி வரும் டெல்டா வகை கொரோனா வைரசுடன், தென் ஆப்ரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரசும் தற்போது அதிவேகமாக மக்களை தாக்கி வருகிறது. இவை இரண்டும் கலந்த புதிதாக மேலும் பல உருமாற்ற  வைரஸ்கள் உருவாகக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்த நிலையில், சில நாட்களுக்கு முன் அதேபோல் புதிய உருமாற்ற வைரஸ் கண்டறியப்பட்டது. அது,  ‘டெல்மைக்ரான்’ என அழைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்டா-ஒமிக்ரானின் புதிய கலவையாக, சைப்ரஸ் நாட்டில் புதிய உருமாற்ற வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.இதற்கு, ‘டெல்டாகிரான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நாட்டில் செயல்படும் சைப்ரஸ் பல்கலைக் கழகத்தின் வைரஸ் மூலக்கூறு துறையின் பேராசிரியர் லியான்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் இதை கண்டுபிடித்துள்ளார். நேற்று வரையில் இந்த வைரசால் 25 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் வீரியம் எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார். இது இரண்டுமே டெல்டா – ஒமிக்ரானின் புதிய உருமாற்றங்களாக அல்லது 2ம் வெவ்வேறு வைரசா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த புதிய உருமாற்ற வைரஸ் கண்டுபிடிப்புகளுக்கு உலக சுகாதார அமைப்பு இதுவரையில் அங்கீகாரம் அளிக்கவில்லை. …

The post ‘டெல்டாகிரான்’ சைப்ரசில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Cyprus ,New Delhi ,South Africa ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி