பெங்களூரு: பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விநியோகம் செய்வதற்காக ரூ.2.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சொக்கனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், குறிப்பாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், தனிப்படையினர் அந்த இடத்தை சோதனை செய்து போதைப்பொருள் வைத்திருந்த நபரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதைப்பொருள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த நபரின் வீட்டில் ஹைட்ரோ கஞ்சா, மரிஜுவானா, எல்எஸ்டி ஸ்ட்ரிப்ஸ் உள்ளிட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள் பதுக்கியது தொடர்பாக, தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கஞ்சா மற்றும் எம்.டி.எம்.ஏ., விற்பனையை தடுக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
The post பெங்களூரு அடுத்த சொக்கனஹள்ளியில் ரூ.2.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.