தென்காசி, டிச.31: தென்காசி நகராட்சி 33 வார்டுகளை கொண்ட பகுதியாகும். இந்நிலையில் நேற்று தென்காசி நகராட்சி 6 மற்றும் 15வது வார்டு மலையான் தெரு பகுதியை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவுன்சிலர்கள் சுமதி இசக்கி ரவி, சங்கரசுப்பிரமணியன் தலைமையில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு அரிசி, அடுப்பு, தண்ணீருடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டதன் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
The post சீரான குடிநீர் வழங்க கோரி தென்காசி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் appeared first on Dinakaran.
