×

ஓய்வூதியதாரர்கள் மார்ச் 15க்குள் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்: போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: மாநகர் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்கால சான்றிதழை மார்ச் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2025ம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் 2025 ஜனவரி மாதம் தொடங்கி, மார்ச் 15ம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்கும்போது, ஓய்வூதிய உத்தரவு ஆணையை கொண்டு வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-23455801 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாநகர் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள், தங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில், TNS-103 என்னும் இணையதள முகப்பில், தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், ஓய்வூதிய உத்தரவு ஆணை, வங்கி புத்தகம் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஓய்வூதியதாரர்கள் மார்ச் 15க்குள் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்: போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Chennai ,Municipal Transport Corporation ,Dinakaran ,
× RELATED நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும்...