×

நவீன கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு வாகனம்: காஞ்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரை “உலக நவீன வாசக்டமி வாரம்” அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடம் உலக நவீன வாசக்டமி வார விழாவினை முன்னிட்டு, ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், “உலக நவீன வாசக்டமி வாரம்” விழாவினை முன்னிட்டு ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்படி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகை ரூ.1,100 மற்றும் ஊக்குவிப்பார்களுக்கு ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. இந்த, நவீன குடும்பநல சிகிச்சையானது நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் செய்யப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) ஹிலாரினா ஜோசிட்டா நளினி, துணை இயக்குநர் (குடும்பநலம் (பொ)) கிருஷ்ணகுமாரி, துணை இயக்குநர் (காசநோய்) காளீஸ்வரி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தாரா, மாவட்ட குடும்பநல செயலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post நவீன கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு வாகனம்: காஞ்சி கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kanchi Collector ,Kanchipuram ,World Modern Vasectomy Week ,Kanchi ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் காந்தி சாலை...