×

கோயம்பேடு மார்க்கெட் பகுதி மெடிக்கல்களில் மருத்துவரின் பரிந்துரை சீட் இல்லாமல் கால்வலி நிவாரணி மாத்திரை விற்பனை: கூலி தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகின்றனர். கூலி தொழிலாளர்கள் உடல்வலி ஏற்படும்போது மார்க்கெட் அருகே உள்ள மெடிக்கல் கடையில் வலி நிவாரணிமாத்திரைகளை டாக்டர்களின் பரிந்துரையின்றி 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கொடுத்த வாங்கி சாப்பிடுகின்றனர். இவற்றை சாப்பிட்டவுடன் புத்துணர்ச்சி கிடப்பதாக கூறப்படுவதால் அவற்றை அடிக்கடி வாங்கி சாப்பிடுவதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி மெடிக்கல் கடைக்காரர்கள், கால் வலி நிவாரணி மாத்திரைகளை சிறிய பேப்பரில் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்த மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால் நாளடைவில் உடலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள மெடிக்கல் கடைகளில் மருத்துவ சீட்டு இல்லாமல் கூலி தொழிலாளர்களுக்கு 30 ரூபாய்க்கு வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்கின்றனர். எனவே, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கால் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும் மெடிக்கல் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கால் வலி நிவாரணி மாத்திரைகளை கண்டுபிடித்து உடனடியாக அந்த கடையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மருத்துவர்கள் கூறும்போது, ‘’மருத்துவரின் அனுமதி இல்லாமல் மெடிக்கலில் மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. மருத்துவரின் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை விற்பனை செய்யவே கூடாது. கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளர்கள், கால் வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவ சீட்டு இல்லாமல் வாங்கி உபயோகப்படுத்திவருவதாக கேள்விப்பட்டோம். அந்த மாத்திரைகளை உட்கொண்டால் கண்டிப்பாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் சோர்வு ஏற்படும். எனவே, மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்க வேண்டாம்’ என்றனர்.

The post கோயம்பேடு மார்க்கெட் பகுதி மெடிக்கல்களில் மருத்துவரின் பரிந்துரை சீட் இல்லாமல் கால்வலி நிவாரணி மாத்திரை விற்பனை: கூலி தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Koyambedu Market ,Annanagar ,Koyambedu Market, Chennai ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் கழிப்பிட...