×

அரக்கோணத்தில் தெருவில் விளையாடிய சிறுவன் உட்பட இருவரை கடித்து குதறிய நாய்

*எம்எல்ஏ நேரில் ஆறுதல்

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு, சுமார் 360க்கும் மேற்பட்ட தெருக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணத்தில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது.

இந்நிலையில், அரக்கோணம் நகராட்சி 2வது வார்டு பகுதியில் நேற்று சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது, 5ம் வகுப்பு படிக்கும் சிறுவனை திடீரென நாய் கடித்தது. இதனால் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று சிறுவனை மீட்டனர்.

அதற்குள்ளாக, அந்த நாய் அங்கிருந்து ஓடி வழியில் மற்றொருவரையும் கடித்து குதறியது.பின்னர் உடனடியாக இருவரும் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,அரக்கோணத்தில் பல்வேறு பகுதியில் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அரசு மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, அரசு மருத்துவமனைக்கு சென்று நாய் கடியால் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களிடம் வலியுறுத்தினார். மேலும்,நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு நகராட்சி பகுதி முழுவதும் இதுபோன்று உள்ள தெருநாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.

The post அரக்கோணத்தில் தெருவில் விளையாடிய சிறுவன் உட்பட இருவரை கடித்து குதறிய நாய் appeared first on Dinakaran.

Tags : MLA ,Comfort ,Arakkonam ,Ranipet District Arakkonam Municipality ,
× RELATED திருவாரூரில் விமான நிலையம் அமைக்கக்...