×

நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள்: விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம்


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய இரு யானைகள் கிராமங்களில் உள்ளே வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் ஆயர்பாடி என்ற கிராமத்தில் நெல்லிமலையிலிருந்து வந்த யானை மற்றும் ஒரு குட்டி யானை என இரு யானைகள் வந்துள்ளது.

இன்று காலை இதனை கண்ட ஆயர்பாடி கிராமமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இரு யானைகளையும் வனப்பகுதியில் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு யானைகளும் தற்போது வரை கிராமத்தை சுற்றியுள்ள விலை நிலங்களில் வளம் வந்து கொண்டிருக்கிறது. இவை குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் இருக்க கூடிய காரணத்தால் அதனை பாதுகாப்பாக மீண்டும் நெல்லி மலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The post நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள்: விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nellimalai forest ,Mettupalayam ,Nellimalai ,Ayarpadi ,Forest department ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!