×

பதிவாளர் அறைக்கு போடப்பட்ட பூட்டை உடைத்து, தஞ்சை பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பதவியேற்பு!!

தஞ்சை : தஞ்சை பல்கலை. துணை வேந்தர், பதிவாளர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பதிவாளர் அறைக்கு பூட்டு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் பொறுப்பு துணை வேந்தர் சங்கர், பதிவாளர் தியாகராஜன் இருவருக்குமிடையே நடந்து வந்த ஈகோ யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஒருவரை ஒருவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை பிறப்பித்தது தமிழ் பல்கலைகழக வட்டாரத்தில் சல சலப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர் கவனத்திற்கு சென்ற நிலையில், பல்கலைகழகத்தில், பழைய நிலையே தொடர வேண்டும், இரண்டு ஆணைகளையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை பதிவாளர் அறைக்கு நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் பூட்டு போட்டுவிட்டார். பதிவாளர் அறையின் வெளிக் கதவை துணைவேந்தர் தரப்பு பூட்டிய நிலையில், உள் அறையை பதிவாளர் தியாகராஜன் பூட்டினார்.இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே போலீஸ் பாதுகாப்புடன் பதிவாளர் அறையில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டது. பழைய பதிவாளர் தியாகராஜன் சாவி கொடுக்க மறுத்ததால் பூட்டு உடைக்கப்பட்டது. இதையடுத்து, பரபரப்புக்கு மத்தியில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பதவியேற்றுக் கொண்டார். துணைவேந்தர்-பதிவாளர் தரப்பு மோதலால் தஞ்சை பல்கலைக் கழகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பேட்டி அளித்த தியாகராஜன், “பதிவாளர் நியமனம் தொடர்பான செயல்பாடுகளால் மிகவும் வேதனையடைகிறேன். தமிழ் வளர்ச்சித் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்த துணைவேந்தர் செயல்படுகிறார். தமிழ் விரோதிகளால் அவச்செயல் நடைபெற்று வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பதிவாளர் அறைக்கு போடப்பட்ட பூட்டை உடைத்து, தஞ்சை பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பதவியேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Tanji University ,Thanhai ,Thantai University ,Thanjavur ,Tamil University ,Deputy Governor ,Sankar ,Registrar ,Thiagarajan ,Tanjay University ,Dinakaran ,
× RELATED விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை...