சென்னை: பாதிக்கப்படும் பெண்களை அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உள்ளது என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார். பாலியல் புகார்களில் பெண்கள் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்கள் உயர்கல்வி பயில்வதை சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஈபிஎஸ். பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது துணிச்சலாக புகார் தருகிறார்கள்.
The post பாதிக்கப்படும் பெண்களை அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உள்ளது: அமைச்சர் கோவி.செழியன் appeared first on Dinakaran.