×

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பதிவாளர் அறையில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டது

தஞ்சை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பதிவாளர் அறையில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் அறைக்கு பூட்டு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் – பொறுப்பு துணைவேந்தர் சங்கர் இடையே மோதலால் பதிவாளர் அறைக்கு பூட்டு போடபட்டது. முறைகேடாக பணியில் சேர்ந்ததாக கூறி தியாகராஜனை பதவி நீக்கம் செய்தார் துணை வேந்தர் சங்கர். பொறுப்பு துணை வேந்தராக சங்கர் இருப்பதே செல்லாது என்று பதிவாளர் தியாகராஜன் பதில் கடிதம் அனுப்பினார். இருவரும் மாறி மாறி பதவி நீக்கக் கடிதம் அனுப்பிய நிலையில் பதிவாளர் அறைக்கு இன்று காலை பூட்டு போடப்பட்டது.

The post தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பதிவாளர் அறையில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Thanjavur Tamil University ,Thanjavur ,Registrar ,Thiagarajan ,Acting ,Vice-Chancellor ,Shankar ,
× RELATED தஞ்சை தமிழ் பல்கலை பிரச்னை அடுத்த வாரம் சிண்டிகேட் கூட்டம்