×

காசிமேட்டில் மீன்களின் விலை உயர்வு: ஒரு கிலோ வஞ்சிரம் ₹1,000க்கு விற்பனை

சென்னை: காசிமேட்டில் நேற்று மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் ₹1,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்றாலே பொதுவாக காசிமேடு சந்தையில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிவது வழக்கம். நள்ளிரவு 2 மணிக்கு ஏல முறையில் தொடங்கும் இந்த விற்பனையில் பெரிய, சிறிய அளவிலான சுற்றுவட்டார வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்வர்.

இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கமாய் கூடும் கூட்டத்தை காட்டிலும் அதிகளவில் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்தனர். விசைப்படகுகளின் குறைவான வரத்தால் அதிகப்படியான மீன்கள் விற்பனைக்கு வந்தபோதிலும் மீன்களின் விலை உயர்ந்தே காணப்பட்டது.

அதன்படி ஒரு கிலோ வஞ்சிரம் ₹900ல் இருந்து ₹1,000க்கு விற்கப்பட்டது. இதேபோல் வவ்வால் ₹600க்கும், இறால் மற்றும் நண்டு ₹350ல் இருந்து ₹400க்கும், சங்கரா ₹300ல் இருந்து ₹350க்கும், கிழங்கான் ₹300க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் வஞ்சிரம், சங்கரா, வவ்வால் ஆகியவற்றின் விலை கணிசமாக ₹50 முதல் ₹100 வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post காசிமேட்டில் மீன்களின் விலை உயர்வு: ஒரு கிலோ வஞ்சிரம் ₹1,000க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kasimedu ,Chennai ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...