×

மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

 

திண்டுக்கல், டிச. 30: திண்டுக்கல்லில் ஹிந்து மஸ்தூர் சபாவின் தமிழ் மாநிலக் குழுவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில நிர்வாகி சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு எச்.எம்.எஸ். தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோத, மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். தொடர்ந்து இந்தியாவில் இருக்கின்ற தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியும் கூட தொழிலாளர்களுக்கு விரோதமாக இருக்கக்கூடிய நான்கு சட்ட தொகுப்புகளை எங்களோடு விவாதிக்க வேண்டும். திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய அரசு புறம் தள்ளி உள்ளது. இந்த அரசாங்கம் கார்ப்பரேட் அரசாங்கமாக மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : State Executives ,Dindigul ,Executives ,Tamil State Committee of Hindu Mazdoor Sabha ,Subramanian ,Jayachandran ,District Secretary ,Prithviraj ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை