×

பாக்.கிற்கு ஆப்கன் பதிலடி 19 வீரர் உள்பட 22 பேர் பலி

காபூல்: பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆப்கனில் உள்ள பக்டிகா மாகாணத்தில் தலிபான்களின் பயிற்சி மையங்கள் மற்றும் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 25ம் தேதி வான் வழி தாக்குதல் நடத்தியது.

இதில் 46 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் ராணுவ தாக்குதலுக்கு,ஆப்கானிஸ்தான் நேற்று பதிலடி தாக்குதல் தொடுத்தது. ஆப்கன் தாக்குதலில் 19 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் 3 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாக்.கிற்கு ஆப்கன் பதிலடி 19 வீரர் உள்பட 22 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bagh ,Kabul ,Afghanistan ,Pakistan ,Taliban government ,Bakhtiqa ,Pak ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் பெண்களை...