×

நைஜீரியாவில் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி

டகார்: வடமேற்கு நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழுவை குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவின் சொகோடோ மாகாணத்தில் சிலாமே பகுதியில் லகுவாரா குழுவினர் பதுங்கியுள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவர்களது தளவாட தளத்தை குறிவைத்து விமானப்படை கிறிஸ்துமஸ் தினத்தன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் தவறுதலாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.

The post நைஜீரியாவில் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Nigeria ,Dakar ,northwestern Nigeria ,Lakwara ,Silame ,Sokoto State, Nigeria ,Dinakaran ,
× RELATED கென்யா, நைஜீரியா, தான்சானியா...