×

கென்யா, நைஜீரியா, தான்சானியா இளம்பெண்களை வைத்து மாஜி டிஐஜி மகன் வீட்டில் ஹூக்கா பார் கஞ்சா விருந்துடன் பாலியல் தொழில்: 23 செல்போன்கள், கஞ்சா, பைக், கார் பறிமுதல்

சென்னை: கோயம்பேட்டில் ஓய்வுபெற்ற டிஐஜி மகன் வீட்டில் ஹூக்கா பாருடன் கஞ்சா மதுவிருந்துடன் பாலியல் தொழில் செய்து வந்த கென்யா, நைஜீரியா, தான்சானியா நாட்டை சேர்ந்த 9 இளம்பெண்களை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், பாலியல் தொழில் செய்ய உடந்தையாக இருந்த இலங்கை பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு மணமகள் நகர் பாரதி அவென்யூவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஓய்வுபெற்ற டிஐஜி ராமச்சந்திரன் மகன் பாலாஜிக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இவர் தற்போது துபாயில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையே இவரது வீட்டிற்கு இரவு நேரங்களில் கடந்த 20 நாட்களாக சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து சென்றது கோயம்பேடு போலீசாருக்கு குடியிருப்புவாசிகள் மூலம் புகார் வந்தது. கோயம்பேடு இன்ஸ்பெக்டர் அருண் மணிமாறன் தலைமையிலான போலீசார் குழு நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஓய்வுபெற்ற டிஐஜி மகன் பாலாஜி வீட்டிற்குள் போலீசார் நுழைந்த போது, சினிமாவில் நடப்பது போல் மது, கஞ்சா, ஹூக்கா பாருடன் அரைகுறை ஆடைகளுடன் வெளிநாட்டு பெண்கள் நடனமாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களுடன் கிண்டி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் கஞ்சா போதையில் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் உடனே அனைவரையும் பிடித்தனர். அப்போது அரைகுறை ஆடைகளுடன் இருந்த 3 வாலிபர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த 3 வெளிநாட்டு பெண்களை உடை மாற்ற சிறிது நேரம் போலீசார் வழங்கினார். பிறகு பாலியல் தொழில் நடத்திய கென்யா, நைஜீரியா, தான்சானியா நாட்டை சேர்ந்த 9 பெண்கள், 3 வாலிபர்களை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 23 செல்போன்கள், ஒரு ஐபேட், 8 கிராம் கொண்ட 5 கஞ்சா பாக்கெட்டுகள், ரூ.31 ஆயிரம் ரொக்கம், 15 ஹூக்கா குடுவைகள், 15 காண்டம், விலை உயர்ந்த பைக் ஒன்று, ஐ-10 கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது கென்யாவை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஓய்வு பெற்ற டிஐஜி ராமச்சந்திரன் மகன் வீட்டை வாடகைக்கு எடுத்து தனது தோழிகளை வைத்து ‘லோகாண்டோ’அப் மூலம் தடையின்றி பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. காவல்துறை அதிகாரிகள் வீடு என்பதால் பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று திட்டமிட்டு பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இந்த வீட்டை இலங்ைகயை சேர்ந்த நிர்மலா (55) என்பவரிடம் வாடகைக்கு எடுத்ததாக சென்ய பெண் தெரிவித்துள்ளார்.

அதன்படி போலீசார் இலங்கை பெண் நிர்மலாவிடம் விசாரணை நடத்திய போது, அவர் இந்த வீட்டை டிஐஜியின் மகன் பாலாஜியின் நண்பரான அதே பகுதியில் வசித்து வரும் அருண் என்பவர் மூலம் கடந்த 2010ம் ஆண்டு முதல் மாதம் ரூ.35 ஆயிரம் வாடகைக்கு நிர்மலாவுக்கு ஒப்பந்தம் செய்து விட்டதும் தெரியவந்தது. அதேநேரம் வாடகைக்கு எடுத்த வீட்டை நிர்மலா ‘பூஜா கெஸ்ட் ஹவுஸ்’ என்ற பெயரில் வெளிநாட்டு பெண்களுக்கு மாதம் ரூ.1 லட்சத்திற்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், நிர்மலாவுக்கு வெளிநாட்டு பெண்கள் கூட்டாக பாலியல் தொழில் செய்வது தெரிந்தே அவர் வீடு வாடைக்கு விட்டதும் விசாரணையில் உறுதியானது.

அதைதொடர்ந்து கோயம்பேடு போலீசார் 4 கென்ய பெண்கள், 4 தான்சானியா பெண்கள், ஒரு நைஜீரிய பெண் என மொத்தம் 9 இளம்பெண்களை விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர். அதன்படி விபசார தடுப்பு பிரிவு போலீசார் மீட்கப்பட்ட 9 வெளிநாட்டு பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், வெளிநாட்டு பெண்களிடம் தொடர்பில் இருந்து வாடிக்கையாளர்களை பிடித்து கொடுத்து வந்த கிருஷ்ணா, முகமது, சாஜித் ஆகிய 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் டிஐஜி மகன் வீடு என்று தெரிந்து பாலியல் தொழில் செய்ய வீடு கொடுத்த இலங்கை பெண் நிர்மலாவிடம் விபசார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் சற்று உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் அவரை கைது செய்ய வில்லை. இருந்தாலும் நிர்மலாவை போலீசார் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்துள்ளனர். இதுவரை நடத்திய விசாரணையில் இலங்கை பெண் ஓய்வுபெற்ற டிஐஜி மகன் வீட்டை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக பாலியல் தொழில் செய்ய மேல் வாடகை விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வெளிநாட்டு பெண்கள் ஹூக்கா பார் மற்றும் கஞ்சா, மது விருந்துகளுடன் பாலியல் தொழில் நடத்த வாய்ப்பு இல்லை. இதனால் இதன் பின்னணியில் பெரிய பாலியல் புரோக்கர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே பிடிபட்ட 3 வாலிபர்கள் மற்றும் மீட்கப்பட்ட 9 வெளிநாட்டு பெண்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஓய்வுபெற்ற டிஐஜி மகன் வீட்டில் ஹூக்கா பாருடன் பாலியல் தொழில் நடந்து வந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கென்யா, நைஜீரியா, தான்சானியா இளம்பெண்களை வைத்து மாஜி டிஐஜி மகன் வீட்டில் ஹூக்கா பார் கஞ்சா விருந்துடன் பாலியல் தொழில்: 23 செல்போன்கள், கஞ்சா, பைக், கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : hookah ,Majhi TIG ,Kenya, Nigeria, Tanzania ,Chennai ,Kenya, ,Nigeria ,Tanzania ,hookah bar ,DIG ,Coimbet ,Sri Lanka ,Maji DIG ,Dinakaran ,
× RELATED டி20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்...