×

மகரவிளக்கு பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த 26ம் தேதி நடைபெற்றது. அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (30ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் (31ம் தேதி) முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.

The post மகரவிளக்கு பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Makaravilakku Puja ,Sabarimala temple ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,Makaravilakku ,Mandala Puja ,Makaravilakku Puja Sabarimala ,temple ,
× RELATED சபரிமலை கோயிலில் 41 நாட்களாக நடைபெற்று வந்த மண்டல கால பூஜை நிறைவு