- ராஜ்காட்
- கெஜ்ரிவால்
- ஆம் ஆத்மி கட்சி
- ஒருங்கிணைப்பாளர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- மன்மோகன் சிங்
- சீக்கிய பிரதமர்
- இந்தியா
ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மன்மோகன் சிங் உலகளவில் பெயர் பெற்ற தலைவர், இந்தியாவின் ஒரே சீக்கிய பிரதமர். அவரது இறுதிசடங்கிற்கும், நினைவிடத்திற்கும் ராஜ்காட்டில் 1000 சதுர யார்டு இடத்தை கூட தரமறுத்துள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் பிரதமர்களும் ராஜ்காட்டில் தகனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த அடிப்படை மரியாதையை கூட மன்மோகன் சிங்கிற்கு ஒன்றிய பாஜ அரசு தர மறுத்துள்ளது. இந்த விஷயத்தில் பாஜ தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும், மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயம் உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும்’’ என்றார். ஆம் ஆத்மியின் எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், ‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மட்டுமல்ல, அவர் சார்ந்த சீக்கிய சமூகத்தையே ஒன்றிய பாஜ அரசு அவமதித்து விட்டது’’ என்றார்.
The post ராஜ்காட்டில் இடம் ஒதுக்காதது ஏன்: கெஜ்ரிவால் கேள்வி appeared first on Dinakaran.