மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பிரணாப் முகர்ஜி இறந்தபோது, அதற்கு இரங்கல் தெரிவிக்க கூட காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தை கூட்டவில்லை. முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் மறைந்தபோது, காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, அவரது இரங்கல் செய்தியை எனது தந்தைதான் தயாரித்தார் என அவரது குறிப்புகளிலிருந்து தெரிந்துக்கொண்டேன். நினைவிடம் கட்டுவதற்கு தகுதியான தலைவர் மன்மோகன் சிங். அவருக்கு நினைவிடம் கட்டுவது மட்டுமின்றி பாரத ரத்னா விருதும் வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.
The post பிரணாப் முகர்ஜி மகள் வேதனை appeared first on Dinakaran.