- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
- நாகப்பட்டினம்
- நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம்
- வட்டம்
- ஜனாதிபதி
- ரவிச்சந்திரன்
- ஸ்ரீதர்…
- தின மலர்
நாகப்பட்டினம்,டிச.28: புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, அரசு கிராம உதவியாளர்கள், ஊர் புற நூலகர்கள் போன்ற சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெரும் 3 லட்சத்து 5ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை காலமுறை ஊதிய முறையில் படித்த இளைஞர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சித்ரா, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் பிரேமா. எம்ஆர்பி அரசு செவிலியர் சங்க மாவட்ட தலைவர் பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அரசு செவிலியர் சங்க ஜீவானந்தம் நன்றி கூறினார்.
The post பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.