×

மீராபாய் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கோரினார் அமைச்சர் அர்ஜூன் மேக்வால்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சிகாரில் உள்ள பிப்ராலியில் உள்ள ஸ்ரீ ஷியாம் கோசாலையில் திங்களன்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கலந்து கொண்டார். அப்போது பேசிய மேக்வால், ‘‘கவிஞரும் கிருஷ்ண பக்தையுமான மீரா மெர்டாவில் பிறந்து சித்தோர்கரில் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் அவரை தொந்தரவு செய்ததாக வரலாறு கூறுகின்றது. ஆனால் அது உண்மையல்ல. திருமணத்துக்கு பின் மீராவின் கணவர் ஒரு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். அதன் பின் இறந்துவிட்டார். அவரது மைத்துனர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீராவை வற்புறுத்தினார். மைத்துனர் தான் துன்புறுத்தினார்.

கணவர் இல்லை. சில வரலாற்று பதிவுகள் மாற்றி எழுதப்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்ய வேண்டியது நமது பொறுப்பாகும்” என்றார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. மீராபாயை அவமதிக்கும் வகையில் மேக்வாலின் கருத்துக்கள் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் மேக்வால் நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில், ” மீராபாய் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மன்னிப்புகோருகிறேன் ” என்ற குறிப்பிட்டுள்ளார்.

The post மீராபாய் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கோரினார் அமைச்சர் அர்ஜூன் மேக்வால் appeared first on Dinakaran.

Tags : Minister ,Arjun Macwal ,Jaipur ,Union Minister ,Arjun Ram Makwal ,Sri Shiam Kosala ,Fibrali, Sikar, Rajasthan ,Macwal ,Meera ,Chittorgarh ,Arjun Makwal ,Mirabai ,
× RELATED இந்து அமைப்புகளின் எதிர்ப்பை மீறி...