- கிறிஸ்துமஸ்
- Kulachal
- பிரசாத்
- தலக்குளம் குளார் தெரு
- திங்கல்நகர்
- அஜிஸ்
- அஜய் குமார்
- அதியார், சென்னை
- கிறிஸ்துமஸ்...
குளச்சல், டிச.28: திங்கள்நகர் அருகே தலகுளம் குலாலர் தெருவை சேர்ந்தவர் பிரசாத். இவருக்கு அஜிஸ் (22), அஜய்குமார் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் அஜய்குமார் சென்னை அடையாறில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அஜய்குமார் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அண்ணன், தம்பி இருவரும் குளச்சல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலை பார்ப்பதற்காக பைக்கில் புறப்பட்டு சென்றனர்.
மண்டைக்காடு அருகே வெட்டுமடை கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அண்ணன், தம்பி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அஜய்குமாரை குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், அஜிசை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதுகுறித்து அஜய்குமார் கொடுத்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரில் வந்தவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பைக்கில் கிறிஸ்துமஸ் குடிலை பார்க்க சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அண்ணன், தம்பி படுகாயம் appeared first on Dinakaran.
