×

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதிதான் சூமோட்டோ வழக்குக்கு அனுமதி தர வேண்டும். தலைமை நீதிபதி வெளியூர் சென்றுள்ளதால் அவரது அனுமதியின்றி விசாரிக்க முடியாது என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்குகளை தாக்கல் செய்வதை யாரும் தடுக்க முடியாது; ரிட் வழக்காக தாக்கல் செய்தால் விசாரிப்போம் என்றும், தலைமை நீதிபதியின் உத்தரவு பெற்ற பின் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Chennai High Court ,Chief Justice ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...