- சுனாமி
- தரங்கம்பாடி, மயிலாடுதுறை மாவட்டம்
- தரங்கம்பாடி
- கலெக்டர்
- மகாபாரதி
- சுதா
- பூம்புகார்
- சட்டமன்ற உறுப்பினர்
- நிவேதா முருகன்
- பவுன்ராஜ்
- தரங்கம்பாடி சுனாமி நினைவிடம்
- மயிலாடுதுறை…
- தின மலர்
தரங்கம்பாடி,டிச.27: 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி தரங்கம்பாடி சுனாமி நினைவிடத்தில் கலெக்டர் மகாபாரதி, எம்பி சுதா, பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதாமுருகன், முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி பேரலை ஏற்பட்ட போது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 319 பேர் இறந்தனர். சுனாமி பேரலையின் 20ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கபட்டது. மயிலாடுதுறை எம்.பி.சுதா, பூம்புகார் எம்எல்ஏவும் மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளருமான நிவேதாமுருகன், முன்னாள் எம்எல்ஏவும் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, துணைத் தலைவர் பொன்ராஜேந்திரன், திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அன்பழகன், அப்துல்மாலிக், முன்னாள் எம்எல்ஏ பாலஅருட்செல்வன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன், மீனவ பஞ்சாயத்தார்கள், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தினர், மற்றும் பாஜ, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும். கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கலெக்டர் மகாபராதி, சீர்காழி கோட்டாட்சியர், சுரேஷ், தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ், சுனாமி நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கடற்கரையில் இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் திதி கொடுத்தினர். சுனாமி நினைவு தரங்கம்பாடியில் தினத்தையொட்டி கடைகள் அடைக்கபட்டிருந்தன. இதே போல் சந்திரபாடி, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, சின்னூர்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களிலும் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது.
The post மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.